`தன்னுடைய சிறந்த நாள்'‍- `காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமந்தா மகிழ்ச்சி

`தன்னுடைய சிறந்த நாள்'‍- `காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமந்தா மகிழ்ச்சி

புகழ்பெற்ற இந்தி டாக் ஷோவான 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் இந்த முறை அதிக அளவில் தெலுங்கு நடிகர்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.

பாலிவுட்டில் பிரபல டாக் நிகழ்ச்சியான 'காஃபி வித் கரண்' தனது புது சீசனுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் 'காஃபி வித் கரண்' என்ற டாக் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் முந்தைய சீசன்களில் பல பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டு பேசுவார்கள். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிக பிரபலமான ஒன்று.

இந்த நிகழ்ச்சியின் புது சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கமாக பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த புது சீசனில் தெலுங்கில் இருந்து சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

பல சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்த 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் முதன் முதலாக கலந்து கொண்ட தெலுங்கு பிரபலங்கள் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது 'பாகுபலி' படக்குழுவினர் ஆவர்.

இதில் நடிகை சமந்தா தனக்கான படப்பிடிப்பை நேற்று முடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான சிவப்பு உடை அணிந்த புகைப்படத்தைதான் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் கேப்ஷனில் தன்னுடைய சிறந்த நாள் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புது சீசனில் நடிகர்களிடம் 18+ கேள்விகளும் கேட்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா தற்போது 'யசோதா', 'சகுந்தலம்' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் 'யசோதா' படத்தின் முதல் பார்வை மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வரும் 'குஷி' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in