நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா
நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா

நயன்தாரா, த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய சமந்தா!

திரையுலகின் முன்னணி கதாநாயகிகள் தொடர்பான சர்வேயில் நயன்தாரா மற்றும் த்ரிஷாவை பின்னுக்கு தள்ளி 2 இடம் பிடித்துள்ளார் சமந்தா.

இந்தியர்கள் விரும்பும் ஓர்மாக்ஸ் ஸ்டார்ஸ் என்ற விருது பட்டியலின் முடிவுகளை ஓர்மாக்ஸ் ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் பிரபலமான இந்திய நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த நடிகை சமந்தா இந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஆலியா பட் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை தீபிகாவும், நான்காவது இடத்தை நயன்தாரா என, 5வது இடத்தை கியாரா அத்வானி, 6வது இடத்தை கத்ரினா அவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால், 8வது இடத்தை த்ரிஷாவும் பிடித்துள்ளார். 9வது இடத்தை தமன்னாவும், 10வது இடத்தை கீர்த்தி சோனன் பிடித்துள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in