யாரை விளாச அந்த முடிவெடுத்தார் நடிகை சமந்தா?

யாரை விளாச அந்த முடிவெடுத்தார் நடிகை சமந்தா?
நடிகை சமந்தா

நடிகை சமந்தா, யாரையோ விளாசுவதற்காகவே ஆபாச வாசகம் கொண்ட டி-சர்ட்டை அணிந்து சென்றார் என்று கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ’சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள அவர், இந்தியிலும் சில படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா- நாக சைதன்யா விவகாரத்துக்குப் பிறகு, இருவர் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ’சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார்’ என்று நாகார்ஜுனா கூறியதாக வெளியான செய்தியை, அவர் மறுத்திருந்தார். இதற்கிடையே நடிகை சமந்தா தனது விவாகரத்து தொடர்பான பதிவை சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார். இதனால், அவரும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைய இருப்பதாகவும் இதற்காக கவுன்சிலிங் செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், மும்பையில் சலூன் ஒன்றில் இருந்து நடிகை சமந்தா வெளியேவரும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாயின. அவர் அணிந்திருந்த டிசர்ட்டில் இடம்பெற்றிருந்த ஆபாச வாசகம், ரசிகர்களை முகம்சுளிக்க வைத்தது. இதையடுத்து அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், அவர் ஏன் அப்படியொரு வாசகம் கொண்ட டிசர்ட்டை அணிந்து சென்றார் என்று புது விளக்கம் ஒன்று கூறப்படுகிறது. நடிகை சமந்தா தொடர்பாக வெளியான வதந்திகளுக்கும் பரபரப்பு செய்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவும், யாரையோ திட்ட வேண்டும் என்பதற்காகவுமே அவர் அப்படியொரு வாசகம் கொண்ட, டி-சர்ட்டை அணிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in