இந்திய சிட்டாடல் யுனிவர்சில் நுழையும் சமந்தா!

சமந்தா
சமந்தாஇந்திய சிட்டாடல் யுனிவர்சில் நுழையும் சமந்தா

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து ப்ரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்.

ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவென்ட் தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய பதிப்பில் நடிகை சமந்தா ரூத் பிரபு வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதி செய்திருக்கிறது.

இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, இரட்டை இயக்குநர்களான ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) தயாரித்து இயக்குகிறார்கள். ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் திரைக்கதை எழுதியுள்ளார். இதன் தயாரிப்பு வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவுக்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள்.

“தி ஃபேமிலி மேன் படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொறுத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது” என்று ராஜ் & டி.கே. தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவின் சிட்டாடல் தயாரிப்பை தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எங்களிடம் ஒரு அற்புதமான படப்பிடிப்புக் குழுவினர் மற்றும் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்கள் உள்ளனர். இது ஆக்கபூர்வச்சிந்தனையோடு கூடிய நடைமுறைகளுக்கு மேலும் உற்சாகமளிக்கிறது” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா இது குறித்து “இந்தத் திட்டம் குறித்து, ப்ரைம் வீடியோ மற்றும் ராஜ் & டிகேவும் என்னை அணுகியபோது, படபடக்கும் இதயத்துடன் இதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்! இந்த குழுவுடன் ‘தி ஃபேமிலி மேன்’ படத்தில் பணிபுரிந்த பிறகு, இது எனக்கு மீண்டும் ஒரு ஹோம்கமிங் ஆக இருக்கிறது. சிட்டாடல் யுனிவர்ஸ் இன் கதைக்களம், குளோப் முழுவதுமான அனைத்து தயாரிப்புகளுக்கு இடையே ஊடுருவி ஒன்றோடொன்று தொடர்புகொண்டு இணைக்கப்பட்ட ஒன்று. மற்றும் மிக முக்கியமாக, இதன் இந்திய இன்ஸ்டால்மென்டின் ஸ்கிரிப்ட் எனக்கு உண்மையாகவே மிகவும் உற்சாகமூட்டியது” என்று உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“ருஸ்ஸோ சகோதரர்களின் கருத்தாக்கத்தில் உருவான இந்த மிகச்சிறந்த யுனிவர்ஸ் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாயிருக்கிறேன். இதன் மூலம் முதல்முறையாக வருணுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in