’உங்க 3 பேரையும் இப்படி பார்க்க மகிழ்ச்சியா இருக்கு’

ரசிகர்கள் மகிழ்ச்சி பதிவு
வரலட்சுமி, சமந்தா, நீரஜா
வரலட்சுமி, சமந்தா, நீரஜா

நடிகை சமந்தா, வரலட்சுமி சரத்குமாருடன் ஓட்டலில் உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நடிகை சமந்தா, தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே சுவிட்சர்லாந்து சென்ற அவர் அங்கு பனிச்சறுக்கு விளையாட்டைப் பயின்றார். அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

சமந்தா
சமந்தா

இந்நிலையில், இந்தியா திரும்பிய சமந்தா 'யசோதா' பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இதில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது முதல் முறை.

மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர். மணி சர்மா இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சமந்தா
சமந்தா

இதற்கிடையே ஐதராபாத்தில் நேற்று வரலட்சுமியை சந்தித்த நடிகை சமந்தா, அவருடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உணவருந்தியுள்ளார். இந்தப் புகைப்படத்தை சமந்தாவின் காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா கோனா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், ’உங்க மூனு பேரையும் இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு’ என்று தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in