கடும் குளிரில் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்ட சமந்தா!

சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா மீண்டும் படப்பிடிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதனை அடுத்து ஆறு மாதங்களுக்கும் மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சிகிச்சைப் பெற்று வந்தார். இதற்கிடையில் சமந்தா நடிப்பில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏப்ரலில் வெளியாகும் இவரது ‘சாகுந்தலம்’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிகிச்சைக்காக சமந்தா சில மாதங்கள் படப்பிடிப்பிற்கு பிரேக் விடுவார் என செய்திகள் வெளியான நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது வெப்சீரிஸ் மற்றும் பாலிவுட்டிலும் சமந்தாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சமந்தா
சமந்தா

குறிப்பாக, ‘தி ஃபேமிலிமேன்2’ வெப்சீரிஸ் இயக்கிய ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாக இருக்கும் சிட்டாடல் வெப்சீரிஸில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. மேலும், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் அதிலும் தன் போர்ஷனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்போது, சிட்டாடல் வெப்சீரிஸுக்காக நைனிடாலில் எட்டு டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் தீவிர ஆக்‌ஷன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சமந்தா. பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சி நிபுணரான யானிக் பென் சமந்தாவுக்கு பயிற்சி கொடுக்கிறார். இந்த வீடியோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்க அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in