இனி புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்: மனம் திறந்த நடிகை சமந்தாவின் தந்தை

இனி  புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்:  மனம் திறந்த நடிகை சமந்தாவின்  தந்தை

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து அவரது தந்தை முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

நட்சத்திர பிரபலங்களான நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். பிறகு இருவரும் திருமண பந்தத்தில் இனி தொடர்வதில்லை என கடந்த வருடம் அக்டோபரில் தங்களது பிரிவைச சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

அந்த சமயத்தில் இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை சமந்தா தான் என அதிகம் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதற்கெல்லாம் சமந்தா பதிலடி கொடுத்தார். மேலும், தற்போது வேறு ஒரு நடிகையுடன் நாக சைதன்யா டேட் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

சமந்தா, நாக சைதன்யா தங்களது விவாகரத்தை அறிவித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக இருக்கும் நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, தனது மகளின் விவாகரத்து பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரது திருமண புகைப்படங்களை மெமரீஸ்ஸில் பகிர்ந்து ‘ஒரு காலத்தில் ஒரு அழகான கதை இருந்தது. அது இனிமேல் இருக்க போவதில்லை. அதனால் இனி புதிய கதையை புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்’ என அதில் கூறியுள்ளார்.

இவரது வருத்தத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்டில் ஆறுதல் சொல்ல அதற்கு சமந்தாவின் தந்தை, ‘உங்கள் அனைவரது ஆறுதலுக்கும் நன்றி. ஆமாம், இந்த உணர்வுகளை நான் கடந்து வர அதிக காலம் தேவைப்பட்டது. ஆனால், வாழ்க்கை மிக சிறியது அதனால், இந்த கவலையில் இருந்து நான் சீக்கிரம் வெளியே வந்து விடுவேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in