`அரபிக் குத்து' பாடலுக்கு சமந்தா கலக்கல் டான்ஸ்!- வைரல் வீடியோ

`அரபிக் குத்து' பாடலுக்கு சமந்தா கலக்கல் டான்ஸ்!- வைரல் வீடியோ

`அர‌பிக் குத்து' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் `பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில் `பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள `அரபிக் குத்து' பாடலை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்தது. தற்போது அரபிக்குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி, வீடியோவை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனத்தை மிஞ்சும் அளவிற்கு சமந்தாவின் நடனம் இருக்கிறது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆடிய 'ஊ சொல்றிய' பாடல்‌ பெரிய அளவில் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.