நடிப்பில் கவனம் செலுத்தும் சமந்தா

நடிப்பில் கவனம் செலுத்தும் சமந்தா

சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துவிட்ட நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுவருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் ‘சாகுந்தலம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள சமந்தா, ‘தி பேமிலிமேன்-2’ வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். இதையடுத்து ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும், ஹிந்திப்படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அதோடு தெலுங்கில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படமொன்றில் நாயகியாக நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. சமந்தா நடிக்கும் திரைப்படங்கள், சீரிஸ்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in