'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’: நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கிய சமந்தா!

'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’:  நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கிய சமந்தா!

தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை, நடிகை சமந்தா சொந்தமாக வாங்கி இருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு, படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் நடித்து வரும் அவர் இப்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஒரே நேரத்தில் 3 இந்தி படங்களில் ஒப்பந்தம் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Silverscreen Media Inc.

இப்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. குணசேகர் இயக்கியுள்ள ‘சாகுந்தலம்’, ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ படங்களை அவர் முடித்துவிட்டார். அடுத்து டாப்ஸி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே அவர், முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஹைதராபாத்தில் வாழ்ந்த வீட்டை, சொந்தமாக வாங்கி இருக்கிறார். நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்த பிறகு அந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்றுவிட்டார். இதை வீட்டின் உரிமையாளரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர்களிடம் பேசி, அதிக தொகை கொடுத்து நடிகை சமந்தா, அந்த வீட்டை வாங்கி இருக்கிறார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in