அதிக சம்பளம்: நயன்தாராவை நெருங்கும் சமந்தா!

அதிக சம்பளம்: நயன்தாராவை நெருங்கும் சமந்தா!

அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் சமந்தா இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில் அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து, பான் இந்தியா படமாக உருவாகியுள்ள, ஷாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார்.

குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. அடுத்து ’யசோதா’ என்ற படத்திலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். ’த பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சமந்தாவுக்கு ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’பாடல் மேலும் புகழை கொடுத்துள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

இப்போது அதிகமான விளம்பர படங்களில் நடிக்கவும் சமந்தாவுக்கு வாய்ப்பு வருகிறது. இந்நிலையில், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் அவர் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள் ஹிட்டானதை அடுத்து தனது சம்பளத்தை ரூ. 5 கோடி வரை உயர்த்திவிட்டதாகக் கூறுகின்றனர். நயன்தாரா, ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இருக்கிறார்.

Related Stories

No stories found.