மும்பையில் வீடு வாங்குகிறார் சமந்தா

சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஹதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த வருடம் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

நடிகை சமந்தா, ‘தி பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து வெளியான ‘புஷ்பா’ படம் அவரை, பாலிவுட்டில் பிரபலமாக்கியது. அவருக்கு இந்திப் பட வாய்ப்புகளும் வெப் தொடர் வாய்ப்புகளும் வருவதால், அவர் மும்பையில் தங்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.

சமந்தா
சமந்தா

இதனால், கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கு வீடு வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அவர் இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.3 கோடி மதிப்பில் அந்த வீட்டை அவர் வாங்கி இருப்பதாகவும் கடலை பார்த்தபடி இருக்கும் அந்த வீட்டின் வேலைகள் முழுவதுமாக முடிந்த பின் அதில் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது. அதுவரை அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகை வீட்டில் குடியிருக்க இருக்கிறார் என்று இந்தி திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா இப்போது, ஷாகுந்தலம், விக்னேஷ் சிவன் இயக்கும் `காத்துவாக்குல ரெண்டு காதல்' படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, யசோதா படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in