நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

நடிகை சமந்தா உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் தசை அழற்சி நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்திற்காகக் கொடுத்திருந்த பேட்டியில் தனது உடல்நிலை சரியில்லாததைப் பற்றி சமந்தா கண்ணீருடன் பேசிய விஷயங்களும் வைரலானது.அதில், ‘என் வாழ்க்கையில் நல்ல நாட்களைப் போலவே மோசமான நாட்களும் இருந்திருக்கின்றன. சில நாட்கள் படுக்கையை விட்டு எழவே கடினமானதாக இருக்கும். அது போன்ற நாட்களைச் சண்டையிட்டுக் கடந்து வரவே விரும்புவேன். என் உடல்நலன் சரியில்லாமல் போய் மூன்று மாதங்கள் ஆகிறது.

எனக்கு அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் ஆகி விடாது. ஆமாம், இது நோய் எதிர்ப்பு குறைபாடுதான். இது என்னை முழுவதுமாக சோர்வாக்கி இருக்கிறது. ஆனால், எனக்குத் தெரியும். நான் ஒரு போராளி. இதனுடன் போராடி எப்படியும் வென்று விடுவேன்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், ‘யசோதா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சமந்தா தனது ஜிம் டிரெய்னருடனும், உடல் நிலை சரியில்லாத சமயத்தில் கூட ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி அவரின் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in