இமயமலை யாத்திரையை முடித்த சமந்தா

இமயமலை யாத்திரையை முடித்த சமந்தா

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த சமந்தா மன அழுத்தத்திலிருந்து விடுபடப் பயணங்கள், உடற்பயிற்சி என்று கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

வட இந்தியாவில் 'யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்' ஆகிய புண்ணிய தலங்களுக்கு விஜயம் செய்யும் 'சர் தம் யாத்ரா' என்பது பிரபலமான ஒன்று.

நடிகை சமந்தா அந்த 'சர் தம் யாத்ரா'வை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் மேற்கொண்டார்.

சமந்தா - ஷில்பா ரெட்டி
சமந்தா - ஷில்பா ரெட்டி

1968-ம் ஆண்டு புகழ்பெற்ற பீட்டில்ஸ் குழுவினர் விஜயம் செய்த, மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியான மையத்துக்கும் சென்றுள்ளார் சமந்தா.

தற்போது யாத்திரையை நிறைவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “ஒரு அற்புதமான யாத்திரை நிறைவு பெற்றது 'சர் தம் யாத்ரா'. ஹிமாலயா மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மகாபாரதத்தைப் படித்தபோது, இந்த உலகின் சொர்க்கமான கடவுள்களின் இருப்பிடமான அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துவிட்டது. எனது இதயத்தில் ஹிமாலயாவுக்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in