ஓடிடி-யில் நேரடியாக வெளியிடுவது ஏன்?- துல்கர் சல்மான் விளக்கம்

ஓடிடி-யில் நேரடியாக வெளியிடுவது ஏன்?- துல்கர் சல்மான் விளக்கம்

`` ’சல்யூட்’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது ஏன்?'' என்று நடிகர் துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள மலையாளப் படம் ‘சல்யூட்’. இந்தி நடிகை டயா பெண்டி நாயகியாக நடித்திருக்கிறார். மனோஜ் கே.ஜெயன், லட்சுமி கோபாலசாமி, சாய்குமார், விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இதில் துல்கர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

துல்கர் நடித்த `குரூப்' படம் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர்.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

பொங்கலுக்கு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கரோனா பரவல் அதிகமானதால் பிப்ரவரியில் படம் வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அப்போதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக துல்கர் சல்மான் அறிவித்தார்.

இந்நிலையில், தியேட்டர்களுக்கு படத்தைத் தருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்த துல்கர் சல்மான் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films ) ஓடிடியில் நேரடியாக வெளியிடுவது ஏன்? என்று விளக்கம் அளித்துள்ளது. அதில், `` ’சல்யூட்’ படத்தை பிப்ரவரி 14-ம் தேதிக்கு முன், திரையரங்குகளில் வெளியிட்டு விடுவோம் என்று ஓடிடி தளத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தோம். கரோனா காரணமாக வெளியிட முடியவில்லை. மார்ச் 30-ம் தேதிக்குள் படத்தை ஓடிடி-க்கு கொடுக்கவில்லை என்றால், அது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகிவிடும். அதனால், ஓடிடியில் வெளியிடுகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in