கசந்தது 24 வருட காதல்: மனைவியை விவாகரத்து செய்தார் பிரபல நடிகர்!

சீமா, சோஹைல் கான்
சீமா, சோஹைல் கான்

பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு அர்பாஸ் கான், சோஹைல் கான் என 2 சகோதரர்கள். இதில் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சகோதரர் அர்பாஸ் கான், நடிகை மலைகா அரோராவை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

குழந்தைகளுடன் சோஹைல் கான், சீமா
குழந்தைகளுடன் சோஹைல் கான், சீமா

இந்நிலையில் சல்மான் கானின் மற்றொரு சகோதரரான சோஹைல் கானும் தனது மனைவி சீமாவை விவாகரத்து செய்துள்ளார். பேஷன் டிசைனரான சீமாவை, 1998 ஆம் ஆண்டு சோஹைல் திருமணம் செய்தார். இவர்களுக்கு நிர்வான், யோகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 24 வருட திருமண வாழ்க்கை கசந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

``குடும்ப நல நீதிமன்றத்தின் வெளியே இன்று இருவரும் ஆஜராகி இருந்தனர். விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தாலும் நட்புடனேயே அவர்கள் காணப்பட்டனர்'' என்று மும்பை மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும் இருவரும் அதிகாரபூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

சல்மான் கானின் பல படங்களில் நடித்துள்ள சோஹைல் கான்,சில படங்களை தயாரித்தும் உள்ளார். பியார் கியா து தர்னா கியா, ஹலோ பிரதர், ஜெய் ஹோ உட்பட படங்களை இயக்கியும் இருக்கிறார்.

நான்கு வருடத்துக்கு முன்பே இவர்கள் விவாகரத்து செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இருவரும் அதற்கு பதிலளிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in