ராஜமௌலியின் தந்தை எழுதும் கதையில் மீண்டும் நடிக்கும் சல்மான் கான்

ராஜமௌலியின் தந்தை எழுதும் கதையில் மீண்டும் நடிக்கும் சல்மான் கான்
விஜயேந்திர பிரசாத், சல்மான் கான்

2015-ம் ஆண்டு பாலிவுட்டில் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘பஜ்ரங்கி பைஜான்’. தற்போது இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளது. ‘பவன் புத்ர பைஜான்’ என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதிலும் சல்மான் கான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படங்களின் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ‘பவன் புத்ர பைஜான்’ திரைப்படத்துக்கும் கதை எழுதுகிறார். முதல் பாகமான ‘பஜ்ரங்கி பைஜான்’ திரைப்படத்தின் கதையை எழுதியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் அநேக படங்களுக்குக் கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். பாகுபலியின் 2 பாகங்களும் அவரது கதையே. ஜனவரி 7 வெளியாகவிருக்கும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் கதையையும் அவர்தான் எழுதியுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் ‘டைகர் 3’, ‘கபி ஈத் கபி தீவாளி’ ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன. அதைத் தொடர்ந்து ‘பவன் புத்ர பைஜான்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும். முதல் பாகத்தை இயக்கிய கபீர் கான் 2-ம் பாகத்தை இயக்குவரா அல்லது வேறு இயக்குநருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in