சிரஞ்சீவியின் காட்ஃபாதரில் இணைந்தார் சல்மான்

சிரஞ்சீவியின் காட்ஃபாதரில் இணைந்தார் சல்மான்

சிரஞ்சீவியுடன் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்போது காட்ஃபாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா, சத்யதேவ், நாசர், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கான் நடிக்கிறார். லூசிஃபர் படத்தில் பிருத்விராஜ் நடித்த கேரக்டரில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சல்மான் கானும் சிரஞ்சீவியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதில் நடிக்க அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்காக மும்பை புறநகர் பகுதியில் சிறப்பு செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருவரும் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in