பண்ணை வீட்டில் சல்மான்கானை பாம்பு தீண்டியது!

பண்ணை வீட்டில் சல்மான்கானை பாம்பு தீண்டியது!
சல்மான் கான்

பாம்புக் கடி காரணமாக சனி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சல்மான்கான், இன்று(டிச.26) காலை வீடு திரும்பினார்.

பாலிவுட் நடிகர் சல்மான்கான், டிச.27 அன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். வருடந்தோறும் கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு, ராய்கட் மாவட்டத்தின் தனது பன்வேல் பண்ணை வீட்டில் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கூடி கொண்டாடுவார். இந்த வருடமும் அதேபோல பண்ணை வீட்டில் பிறந்த நாளுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார்.

சனி இரவு, சல்மான்கான் பாம்பு தீண்டிய நிலையில் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சல்மானை தீண்டியது விஷமற்ற பாம்பு எனத் தெரியவந்தது. இதனையடுத்து, இரவு ஓய்வுக்குப் பின்னர் ஞாயிறு காலை வீடு திரும்பினார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கான், பிக்பாஸ் அரங்கிலும், பங்கேற்பாளர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடி இருந்தார்.

Related Stories

No stories found.