காட்டுக்குள் ஏடிவி வாகனத்தில் பயணித்த சாக்‌ஷி அகர்வால்

காட்டுக்குள் ஏடிவி வாகனத்தில் பயணித்த சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்‌ஷி அகர்வால், ‘காலா’, ‘விசுவாசம்’, ‘சிண்ட்ரெல்லா’, ‘அரண்மனை-3’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரவி’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சமீபத்தில் அடர் வனத்துக்குள் ஏடிவி வகை வாகனத்தில் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

‘ஆல் டெரைன் வெகிக்கல்’ (All Terrain Vehicle) எனப்படும் இவ்வகை வாகனங்கள் காடு, மலை, பாலைவனம் என்று அனைத்து வகையான நிலப்பரப்பிலும் ஓட்டக்கூடிய சக்திவாய்ந்த வாகனமாகும். ஏடிவி வாகனத்தை ஓட்டியதோடு மட்டுமல்லாமல், ஏடிவி வாகனத்துடன் காட்டுக்குள் ஒரு போட்டோஷூட் நடத்தி முடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். தற்போது அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.