நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்: சாய்னா தந்தை கோரிக்கை

நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்: சாய்னா தந்தை கோரிக்கை

நடிகர் சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் சித்தார்த் அவ்வப்போது ட்விட்டரில் தெரிவிக்கும் கருத்து சர்ச்சையாவது வழக்கம். இந்நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பு கேள்விக்குறியான விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்த, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், ‘எந்த நாடும் தனது சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’என்று கூறியிருந்தார்.

சாய்னாவின் அந்தப் பதிவை டேக் செய்த நடிகர் சித்தார்த் தெரிவித்திருந்த கருத்து, பெண்களை ஆபாசமாக சித்தரிக்கிறது என்று சர்ச்சை எழுந்தது. பலர் அவருக்கு எதிராக போர்க்கொடித் தூக்கினர். கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, நடிகர் சித்தார்த் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு பரிந்துரை செய்தார். மேலும், சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு ட்விட்டர் இந்தியாவுக்கும் அவர் கடிதம் எழுதினார்.

எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் நடிகர் சித்தார்த், யாரையும் தரகுறைவாகவோ, அவமரியாதை செய்ய வேண்டும் என்றோ எதுவும் கூறவில்லை என்றும், ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் தனக்கு இல்லை என்றும் ட்விட்டரில் விளக்கம் கொடுத்தார்.

ஹர்விர் சிங் நேவால்
ஹர்விர் சிங் நேவால்

இந்நிலையில் சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங் நேவால், நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர், “திரைப்படத்துறையை சேர்ந்த ஒருவர் (சித்தார்த்), சாய்னாவுக்கு எதிராக சில மோசமான கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதற்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இந்தக் கருத்தால் எங்கள் குடும்பம் குழப்பத்தில் இருக்கிறது. சாய்னாவும் இந்தக் கருத்தால் வருத்தமடைந்திருக்கிறார். இதற்காக அவர் (சித்தார்த்) வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in