'என் மகள் மாதிரியே இருக்கீங்களே’: சாய் பல்லவியை கண்டு கண்ணீர் விட்ட குடும்பம்!

'என் மகள் மாதிரியே இருக்கீங்களே’: சாய் பல்லவியை கண்டு கண்ணீர் விட்ட குடும்பம்!

நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அவர் அதிகப் படங்களில் நடிக்கிறார். அவர் இப்போது நடித்துள்ள தெலுங்கு படம், ’விராட பர்வம்’. ராணா, பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வேணு உடுகுலா இயக்கி இருக்கிறார். வரும் 17-ம் தேதி படம் வெளியாகிறது.

90-களில் தெலங்கானாவில் நக்சல் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் சாய் பல்லவி, 'வெண்ணிலா' என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் ’சரளா’ என்ற பெண்ணின் உண்மைச் சம்பவக் கதையை கொண்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி வாரங்கல்லில் நேற்று நடந்தது. அப்போது 'சரளா' என்ற பெண்ணின் வீட்டுக்குச் சென்றார் சாய் பல்லவி. அவரைக் கண்டதும், தங்கள் மகளை போல் இருப்பதாகக் கூறி, சரளாவின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். அதைப் பார்த்து, சாய் பல்லவியும் கண்ணீர் விட்டார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் ராணா, இயக்குநர் வேணு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

பின்னர், மகள் வீட்டுக்கு வந்தால் சேலை கொடுக்கும் வழக்கப் படி, சாய் பல்லவிக்கு சேலை ஒன்றை சரளா குடும்பத்தினர் வழங்கினர். இதை எதிர்பார்க்காத சாய் பல்லவி நெகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in