`புஷ்பா2’-ல் இணையும் சாய் பல்லவி?

`புஷ்பா2’-ல் இணையும் சாய் பல்லவி?

‘புஷ்பா2’-ல் நடிகை சாய்பல்லவி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றி பெற்றது.

`புஷ்பா-தி ரெய்ஸ்’ என முதல் பாகமும் ‘புஷ்பா- தி ரூல்’ என இரண்டாம் பாகமும் உருவாகும் என படக்குழு அறிவித்தது. முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், கடந்த மாதம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்தது. இதிலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். முதல் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த பஹத் ஃபாசிலும் நடிக்கிறார். மேலும் படத்தின் மூன்றாம் பாகமும் எடுக்கும் எண்ணம் இயக்குநருக்கு இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகத் ஃபாசில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சாய்பல்லவி இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் பழங்குடி பெண் என முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in