நாக சைதன்யா வீடியோவில் மறைக்கப்பட்ட பெண் இவர்தானா?

நாக சைதன்யா - சாய் பல்லவி
நாக சைதன்யா - சாய் பல்லவி

கடந்த 2021-ம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது

சாய்பல்லவி
சாய்பல்லவி

இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. நாக சைதன்யா நடிக்கும் 23-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த வேடத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்த நிலையில், தற்போது சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். சாவ்யாச்சி என்பவர் படத்தை இயக்குகிறார்.

நடிகை சாய்பல்லவி
நடிகை சாய்பல்லவி

இதனை, நாக சைதன்யா வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார். ஆனால், அதில் பெண்ணின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. அந்த நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்த நிலையில், சாய்பல்லவியுடன் எடுத்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in