‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ஸில் இருந்து விலகிய சாய் காயத்ரி; மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் தீபிகா?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’சாய் காயத்ரி, விஜே தீபிகா

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகியதை அடுத்து, மீண்டும் தீபிகா எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இவர் கூறியிருப்பதாவது, 'நான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சிரீயலில் இருந்து விலகி விட்டேன். இனிமேல், ஐஷ்வர்யா கதாபாத்திரம் எனக்கு சரியாக வரும் எனத் தோன்றவில்லை. இனிமேல் ஐஷ்வர்யா கதாபாத்திரத்தின் கதை மற்றும் அந்த கதாபாத்திரம் என்னுடைய மீடியா பயணத்திற்கு சரியாக வரும் என்று தோன்றவில்லை.

இந்தப் பயணத்தில் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டு மதிப்பளித்த விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி' எனக் கூறியுள்ளார். சாய் காயத்ரி விலகியதை அடுத்து ஏற்கனவே அந்த கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா மீண்டும் நடிக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, சீரியல் தரப்பு விரைவில் உறுதிப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in