சாய் தன்ஷிகா 2 வேடங்களில் நடிக்கும் ’மனோகரி’

பட பூஜை
பட பூஜை

சாய் தன்ஷிகா 2 வேடங்களில் நடிக்கும் ’மனோகரி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் நிறுவனம் சார்பில், மகேஷ்வரன் நந்தகோபால் ’சிட்தி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதில், அஜி ஜான், ஐ.எம்.விஜயன் நடித்துள்ளனர். பயஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளத்தில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து சாய் தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் ’மனோகரி’ படத்தை அவர் தயாரிக்கிறார்.

’மனோகரி’ படத் தொடக்கவிழாவில்...
’மனோகரி’ படத் தொடக்கவிழாவில்...

இதில் பாடலாசிரியர் சினேகன் மனைவி கன்னிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து நடிக்கின்றனர். இவர்களுடன் கராத்தே மணி மகன் ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.

ஜெயராஜ், ஜெகதீஸ்வரன், ஜாஹீர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவாஸ் அஹமது இயக்குகிறார்.

சாய் தன்ஷிகா
சாய் தன்ஷிகா

படம் பற்றி அவர் கூறும்போது, “நடிகர் திலகம் சிவாஜிக்கு ’மனோகரா’ போல சாய் தன்ஷிகாவுக்கு ’மனோகரி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்திராத கேரக்டரில் இதில் நடிக்கிறார். சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. கொடைக்கானல், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in