நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்: தந்தையின் அதிர்ச்சி புகாரால் சிக்கிய காதலன்

நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்: தந்தையின் அதிர்ச்சி புகாரால் சிக்கிய காதலன்
நடிகை பல்லவி டே-வுடன் காதலர் சங்னிக்

நடிகை தற்கொலை வழக்கில் அவர் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல வங்காள நடிகை பல்லவி டே (Pallavi Dey). பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர் அம்மாநிலத்தில் பிரபலமானவர். கொல்கத்தா அருகில் உள்ள கர்ஃபா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நடிகை பல்லவியும் அவர் காதலர் சங்னிக் சக்கரவர்த்தியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் ஏதும் பிரச்சினையா, அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பல்லவி டேவின் தந்தை, தன் மகள் தற்கொலைக்கு சங்னிக் தான் காரணம் என்றும் அவர் மீது கொலை, சதி, பண மோசடி உள்பட பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in