’800’ படவிழாவில் கலந்து கொள்ளும் சச்சின்... அப்டேட் என்ன?

’800’ திரைப்படம்...
’800’ திரைப்படம்...

’800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கிரிக்கெட்டர் சச்சின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளராக சாதனைப் படைத்துள்ளார் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ உருவாகி இருக்கிறது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இப்படத்தின் டிரெய்லர் விழா செப்டம்பர் 5ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

வரலாற்று சாதனை மிக்க பல போட்டிகளில் சச்சின் இந்தியாவுக்காகவும், முரளிதரன் தனது நாடான இலங்கைக்காகவும் விளையாடியுள்ளனர். களத்தில் அவர்களுக்கு இடையே போட்டி இருந்த போதிலும், இரண்டு ஜாம்பவான்களும் எப்போதும் களத்திற்கு வெளியே நல்ல உறவைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர். வரும் செவ்வாய்கிழமை டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு டெண்டுல்கர் வருவார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in