`மனதை உலுக்கும் ஓர் அழுத்தமான படைப்பு'- கீர்த்தி சுரேஷின் `சாணிக்காயிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

`மனதை உலுக்கும் ஓர் அழுத்தமான படைப்பு'- கீர்த்தி சுரேஷின் `சாணிக்காயிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’சாணிக்காயிதம்’ படத்தின் ரிலீஸ் தேதியை, அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், “சாணிக்காயிதம்”. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பொன்னி என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷும் சங்கையா என்ற கேரக்டரில் செல்வராகவனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் மே மாதம் 6-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் அதிரடி ஆக் ஷன் படமான இது, தெலுங்கில் சின்னி (Chinni) என்ற பெயரில் வெளியாகிறது.

படம் பற்றி அருண் மாதேஸ்வரன் கூறும்போது, “சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஓர் அழுத்தமான படைப்பு. பழி வாங்கும்  குறிக்கோளோடு  பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in