ஓடிடியில் வெளியாகிறது ’சாணிக் காயிதம்’

செல்வராகவன்
செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, விக்னேஷ்சிவன் வெளியிட்ட படம், ’ராக்கி’. இந்தப் படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்து இயக்கியுள்ள படம், ’சாணிக் காயிதம்’. இந்தப் படம் மூலம் இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

’சாணிக் காயிதம்’- செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
’சாணிக் காயிதம்’- செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானபோதே வரவேற்பைப் பெற்றது. படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இந்தப் படம் ஏப்ரல் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் வரும் என்று தெரிகிறது.

தனுஷின் படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், அவர் அண்ணன் செல்வராகவன் படமும் ஓடிடியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். செல்வராகவன் விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in