வெளியான சிறிது நேரத்திலேயே லீக் ஆனது `சாணிக் காயிதம்’

வெளியான சிறிது நேரத்திலேயே லீக் ஆனது `சாணிக் காயிதம்’

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’சாணிக் காயிதம்’ படம் ஓடிடியில் வெளியான சிறிது நேரத்திலேயே, இணையதளங்களில் திருட்டுத்தனமாக கசிந்துள்ளது.

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள படம், ’சாணிக் காயிதம்’. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கையா என்ற கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார். கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்), தனது ஐந்து வயது மகள், தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழ்கிறார். துரதிர்ஷ்டவசமான இரவொன்றில் அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் ஆதரவைப் பெறுகிறாள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியானது. வெளியான சில மணி நேரத்திலேயே யூடியூப்-பில் லீக் ஆகி உள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in