`சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ தமிழ் ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

`சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’  தமிழ் ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’அக்கா குருவி’யின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

’மிருகம்’, ’உயிர்’, ’சிந்து சமவெளி’, ’கங்காரு’ உட்பட சில படங்களை இயக்கியவர் சாமி. இவர், உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ’சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் உரிமையை பெற்று தமிழில் ’அக்கா குருவி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ’சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை மஜித் மஜிதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கைக்கு இடையிலான பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பார்கள்.

அக்கா குருவி படத்தில்..
அக்கா குருவி படத்தில்..

உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மாஹின், டாவியா, தாரா ஜெகதாம்பா, செந்தில்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. கரோனாவால் இதன் ரிலீஸ் பலமுறை தள்ளிப் போனது. இந்நிலையில், மே மாதம் 6-ம் தேதி படத்தை வெளியிடுகின்றனர். வரும் 25-ம் தேதி இந்தப் படத்தின் பாடல் வெளியீடு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in