நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அதிர்ச்சி பதில் தந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அதிர்ச்சி பதில் தந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பதில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயை கலைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். ஒருகட்டத்தில் விஜயை அரசியலுக்கு அழைத்துவர உந்தித் தள்ளினார். ஆனால், அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாததால் தந்தை, மகன் உறவிலும் விரிசல் வந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சாமி தரிசனம் செய்யவந்தார். இதுகுறித்துத் தெரிந்ததும், ஏராளமான செய்தியாளர்கள் கோயிலின் முன்பு குவிந்தனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டார். உடனே அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர்," விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள்" என ஒரு வரியில் முடித்துக் கொண்டார். தந்தை, மகன் இடையே இன்னும் கூட மனக்கசப்புகள் மாறவில்லையே என இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சங்கடத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in