ஆயுள் விருத்திக்காக சிறப்பு ஹோமம் ... விஜய் பெயரில் பூஜை: திருக்கடையூரில் எஸ்.ஏ.சந்திரசேகர் வழிபாடு!

ஆயுள் விருத்திக்காக சிறப்பு ஹோமம் ... விஜய் பெயரில் பூஜை: திருக்கடையூரில் எஸ்.ஏ.சந்திரசேகர் வழிபாடு!

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோயிலில் திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு செய்தார். அத்துடன் நடிகர் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்), உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது தென் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் வந்து வழிபட்டு செல்கிறார்கள். அந்த வகையில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபா உடன் இன்று கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து கொண்டார்.

அவருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வழிகாட்டுதலின்படி ஆயுள் விருத்திக்காக அமிர்தகடேஸ்வரரை வழிபட வந்திருந்தனர். அவர்களுக்கு சதாபிஷேக ஹோமம் ஆகம விதிமுறைப்படி செய்து வைக்கப்பட்டது. அனைத்து பூஜைகளையும் முறைப்படி செய்து முடித்த பின்னர் தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in