ஹரித்துவாரில் ரிக்‎ஷா ஓட்டும் எஸ்.ஏ.சந்திரசேகர்: நெகிழ்ந்த உதவி இயக்குநர்கள்!

ஹரித்துவாரில் ரிக்‎ஷா ஓட்டும் எஸ்.ஏ.சந்திரசேகர்: நெகிழ்ந்த உதவி இயக்குநர்கள்!

ஹரித்துவாருக்கு பக்திச் சுற்றுலா சென்றுள்ள நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது உதவி இயக்குநர்களை வைத்து ரிக்‎ஷா ஓட்டிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ரசிகர் மன்றத்தை நடத்தி வந்தார். இந்த ரசிகர் மன்றத்தை அரசியல் களத்தில் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதையும் மீறி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க சந்திரசேகர் முயற்சி செய்தார். இதையடுத்து அவருக்கும், மகன் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிலிருந்து நடிகர் விஜய் வெளியேறி பனையூரில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வாசித்து வருகிறார். அவர்கள் இருவரும் இதுவரை பேசிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் தனது தாயார் சோபா சந்திரசேகருடன் பேசி வருகிறார். அரசியல் களத்தில் இறக்க திட்டமிட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மகன் விஜய்யால் தடை ஏற்பட்டது. இதனால் கடும் விரக்தியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் பக்திச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தனது உதவி இயக்குநர்களுடன் ஹரித்வார் சென்றுள்ளார் சந்திரசேகர். அங்கே தனது உதவியாளர்களை சைக்கிள் ரிக்‎ஷாவில் அமர வைத்து ஓட்டிச்சென்றுள்ளார். இதை நினைத்து அவரது உதவியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in