'பல முறை படமாக்கியும் தவறே செய்யவில்லை': தனுஷ் நடிப்பைப் புகழும் ஹாலிவுட் நடிகர்!

'பல முறை படமாக்கியும் தவறே செய்யவில்லை': தனுஷ் நடிப்பைப் புகழும் ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் சிறந்த நடிகர் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம், ’தி கிரே மேன்’. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்', 'கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்', 'சிவில் வார்' போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதர்கள் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்களுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக அங்கு மூன்று மாத காலம் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பினார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இதில் தனுஷுடன் நடித்துள்ள ரியான் காஸ்லிங், அவர் நடிப்பைப் பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, ‘’தனுஷ் நம்ப முடியாத, சிறந்த நடிகர். நாங்கள் சண்டைக் காட்சியை படமாக்கியபோது, அவர் தவறே செய்யவில்லை. அதை பலமுறை ரீஷூட் செய்தபோதும் தனுஷ் தவறு செய்யவில்லை. அவர் மிகவும் வேடிக்கையானவர். எனக்கு அவரைப் பிடித்துவிட்டதால் எதிரியாகவோ அல்லது வேறு ஏதாவாகவோ நடிப்பது கடினமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்களும் அவரைப் பாராட்டியுள்ளனர். ‘’நாங்கள் அவருக்கு தீவிர ரசிகர்களாக மாறிவிட்டோம். அவரை மனதில் வைத்துதான் அந்த கேரக்டரை உருவாக்கினோம். உலகின் சிறந்த கொலையாளிகளில் ஒருவராக அவர் நடிக்கிறார். இதில் இரண்டு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன’’என்று தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in