`அதை தனுஷ் ஒருவரால் தான் செய்ய முடியும்'- ரூஸோ பிரதர்ஸ் சொன்ன புதுத் தகவல்

`அதை தனுஷ் ஒருவரால் தான் செய்ய முடியும்'- ரூஸோ பிரதர்ஸ் சொன்ன புதுத் தகவல்

நடிகர் தனுஷை ‘தி க்ரேமேன்’ இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் புகழ்ந்துள்ளனர்.

கடந்த மாதம் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான ‘தி க்ரேமேன்’ படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் குறித்தும் இதில் நடித்துள்ள நடிகர் தனுஷின் நடிப்பு பற்றியும் இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் தங்களது சமீபத்திய பேட்டி ஒன்றில் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் பேசியிருப்பதாவது, ’ரயான் கோஸ்லிங் மற்றும் க்ரிஸ் ஈவன் ஆகியோரின் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் ஒருவரை நாங்கள் தேடி கொண்டிருந்தோம்.

அதை தனுஷ் ஒருவரால் தான் செய்ய முடியும். அவருடன் இணைந்து வேலை பார்ப்பதற்கு முன்பே தனுஷின் தீவிர ரசிகர்கள் நாங்கள். நடிப்பை பொருத்தவரை அவர் ஒரு மாஸ்டர். ‘தி கிரேமேன்’ படத்தின் காட்சிகளிலும் நீங்கள் அதை பார்க்க முடியும். சண்டையும் நடனமும் ஒன்று போல தான் இருக்கிறது. ’ஜகமே தந்திரம்’ படத்திலும் அப்படி தான். நடிக்கும் போது நேரில் அவர் கொடுக்கும் அந்த எனர்ஜியை திரையிலும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்’ என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

ரூஸோ பிரதர்ஸின் இந்த காணொளிக்கு நடிகர் தனுஷ் அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நான் எதிர்பாராத ஒரு விஷயம். உங்களுக்கு நன்றி ரூஸோ பிரதர்ஸ். எனக்கு மட்டுமல்ல ‘ஜகமே தந்திரம்’ படக்குழுவிற்குமே இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் தான்’ என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in