என்பெயரில் பரவும் வதந்திகள்

தற்கொலை முயற்சி சர்ச்சைக்கு பிரபல நடிகை பதில்
என்பெயரில் பரவும் வதந்திகள்
நடிகை பாமா

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலை, நடிகை பாமா மறுத்துள்ளார்.

இளம் மலையாள நடிகை ஒருவர், மயங்கிய நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. போலீஸார் விசாரணையில், தூக்க மாத்திரையை தவறுதலாக அதிகம் உட்கொண்டதால் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தற்கொலை முயற்சி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்குப் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரபல நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், இந்த இளம் நடிகை சாட்சியாக இருக்கிறார். இந்த வழக்கில் முதலில் நடிகர் திலீப்புக்கு எதிராகக் கருத்துக் கூறிய சாட்சிகள், இப்போது மாறிவருவதால், மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது.

இந்த நடிகையின் தூக்க மாத்திரைப் பிரச்சினைக்கும் நடிகை கடத்தப்பட்ட வழக்கின் சமீபத்திய விசாரணை முன்னேற்றங்களுக்கும் தொடர்பில்லை என்ற குற்றப்பிரிவு போலீஸார், நடிகையின் பெயரை வெளியிடவில்லை.

நடிகை பாமா
நடிகை பாமா

இதற்கிடையே, தூக்க மாத்திரை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நடிகை பாமா என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவின. இதுபற்றி பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், நடிகை பாமா விளக்கம் அளித்துள்ளார்.

“சமீப காலமாக என் பெயரில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் அக்கறை கொண்டவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். உங்கள் அன்புக்கு நன்றி’’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், குறிப்பிட்டுள்ளார்.

மலையாள நடிகையான பாமா தமிழில், எல்லாம் அவன் செயல், சேவற்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு, கொச்சி தொழிலதிபர் அருண் ஜகதீஷை திருமணம் செய்துகொண்ட அவருக்கு, இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in