'நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட இன்னும் ரூ.30 கோடி தேவை’

வங்கியில் கடன் பெற முடிவு
கார்த்தி, விஷால், நாசர், பூச்சி முருகன்
கார்த்தி, விஷால், நாசர், பூச்சி முருகன்

நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி முடிக்க, ரூ.30 கோடி தேவை என்றும், அதற்காக வங்கி கடன் பெற இருப்பதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கே.பாக்யராஜ், நாசர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. நாசர் அணியில் தலைவர் பதவிக்கு அவரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிட்டனர்.கே.பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு அவரும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் போட்டியிட்டனர். இதில் நாசர் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெற்றது. புதிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கார்த்தி, விஷால், நாசர், பூச்சி முருகன்
கார்த்தி, விஷால், நாசர், பூச்சி முருகன்

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, துணைத்தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்கான ஒப்புதலை பொதுக்குழுவில் பெற்றுள்ளோம். இன்னும் 40 சதவீத கட்டிடப்பணி முடிவடைய வேண்டி இருக்கிறது. அதற்கு ரூ.30 கோடி தேவையாக இருக்கிறது. வங்கி கடன் பெற்று கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளோம். நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட இருக்கிறோம். இன்னும் மூன்று மாதத்துக்குள் கட்டிட வேலையை தொடங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in