துல்கர் சல்மான் பட இயக்குநரிடம் பணமோசடி... உதவி இயக்குநர் மீது பரபரப்பு புகார்!

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

'கண்ணும்‌ கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநரிடம் மூன்று லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம்
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம்

பிரபல திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி(40). இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் நேற்று அளித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி
திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி

அதில், தான் தமிழ் சினிமா இயக்குநராக பணிபுரிந்து வருவதாகவும், தன்னிடம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பணியில் சேர்ந்த நாள் முதல் தன் வீட்டு வரவு, செலவு கணக்குகளை உதவி இயக்குநர் முகமது இக்பால் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம் கொடுத்து அண்ணாநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் அடகு வைத்து பணம் பெற்று வருமாறு அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்துடன் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி
ரஜினிகாந்துடன் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி

ஆனால், நகையை அடகு வைத்து கிடைத்த 3 லட்ச ரூபாயை முகமது இக்பால் கையாடல் செய்ததாகவும், பணம் குறித்து கேட்டபோது தனக்கும், தன் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

எனவே, உதவி இயக்குனர் இக்பால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், அண்ணா நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயக்குநரிடம் உதவி இயக்குநர் மூன்று லட்ச ரூபாய் கையாடல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!

அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in