ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வு!

ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வு!

ஆஸ்கர் விருது இறுதி பட்டியலில் 15 பாடல்களில் ஒன்றாக ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை லைகா, பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைந்து தயாரித்தன. கடந்த மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இதனிடையே கோல்டன் க்ளோப் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மற்றும் `நாட்டு நாட்டு' பாடல் தேர்வானது. இந்த நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த 'ஒரிஜினல் பாடல்' பிரிவில் இறுதிக்சுற்றுக்கு தகுதி பெற்ற 15 பாடல்களில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in