கோல்டன் குளோப் விருதை வென்றது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்!

கோல்டன் குளோப் விருதை வென்றது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்!

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை லைகா, பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைந்து தயாரித்தன. கடந்த மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இதனிடையே கோல்டன் க்ளோப் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மற்றும் `நாட்டு நாட்டு' பாடல் தேர்வானது. இந்த நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த 'ஒரிஜினல் பாடல்' பிரிவில் இறுதிக்சுற்றுக்கு தகுதி பெற்ற 15 பாடல்களில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான கோல்டன் குளோப் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படம் இரண்டு பிரிவுகளின் நாமினேட் ஆகியது. ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான (நாட்டு நாட்டு) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில் இன்று கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த `நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இதையடுத்து படக்குழுவினரும், தெலுங்கு, தமிழ் சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in