தமிழ்நாட்டில் 550 தியேட்டர்களில் வெளியாகிறது ’ஆர்ஆர்ஆர்’

தமிழ்நாட்டில் 550 தியேட்டர்களில் வெளியாகிறது ’ஆர்ஆர்ஆர்’

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தமிழ்நாட்டில் 550 தியேட்டர்களில் வெளியாகிறது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகை ஆலியா பட், ராம் சரண் காதலியாக நடித்துள்ளார். மற்றும் இந்தி நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். நாளை வெளியாகும் இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது.

தமிழ்நாட்டில் 550 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது இப்படம். படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

இவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்தப் படத்தின் கரு என்று ராஜமவுலி கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in