’ஆர்ஆர்ஆர்’ : அஜய்தேவ்கன் கெஸ்ட் ரோல் சம்பளம் ரூ.35 கோடி!

’ஆர்ஆர்ஆர்’ : அஜய்தேவ்கன் கெஸ்ட் ரோல் சம்பளம் ரூ.35 கோடி!
நடிகை ஆலியா பட், நடிகர் அஜய்தேவ்கன்

ராஜமெளலி இயக்கியுள்ள ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க, இந்தி நடிகர் அஜய்தேவ்கனுக்கும் நடிகை ஆலியா பட்டுக்கும் வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர் ஆர் ஆர்). இதில், பிரபல தெலுங்கு ஹீரோக்கள், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், இந்தி நடிகர் அஜய்தேவ்கன், நடிகை ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 7-ம் தேதி வெளியாவதாக இருந்தது. கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் அஜய் தேவ்கனுக்கு சம்பளமாக ரூ.35 கோடியும், நடிகை ஆலியா பட்டுக்கு ரூ.9 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியா பட் வரும் காட்சிகள் வெறும் 20 நிமிடங்கள்தான் என்றும், அதற்கு இவ்வளவு கோடி சம்பளம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜய்தேவ்கன் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவர் கேரக்டர் கதைக்கு முக்கியம் என்பதாலும், இந்தி மார்க்கெட்டுக்கு அவர் தேவை என்பதாலும் இந்தத் தொகைக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.