
பார்த்திபன் நடித்து ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள 'இரவின் நிழல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஒத்த செருப்பு' படத்திற்குப் பின், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஆர்.பார்த்திபன். ‘ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்ததைப் போல 'இரவின் நிழல்' படம் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் மைக்கை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார் பார்த்திபன். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “பார்த்திபனின் ’இரவில் நிழல்’ திரைப்படம் அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” எனப் பாராட்டினார்.
சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் இரவின் நிழல் திரையிடப்பட உள்ளது என்று பார்த்திபன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதன் போஸ்டரில், ‘இதுபோன்ற முதன் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களாய் நினைத்து வணங்குகிறேன்!- வடிவேல் ரசிகர்’ என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளனர்.