புதிய சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல்...குஷியில் ரசிகர்கள்!

’ரவுடி பேபி’ பாடல்
’ரவுடி பேபி’ பாடல்

’ரவுடி பேபி’ பாடல் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி2’. இந்தப் படத்தினை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ பாடல் இப்போது வரை இளைஞர்களின் பிளே லிஸ்ட்டில் டிரெண்டிங்கில் உள்ளது.

’ரவுடி பேபி’ பாடல்
’ரவுடி பேபி’ பாடல்

இதற்கு முன்பு பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த இந்தப் பாடல், தற்போது புதிய சாதனயாக 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

’ரவுடி பேபி’ பாடல்
’ரவுடி பேபி’ பாடல்

’ரவுடி பேபி’ பாடல் நடனத்தின் போது நடிகை சாய் பல்லவி மாதவிடாய் சமயத்தில் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்தப் பாடலுக்கு நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in