இங்கு லியோ ரிலீஸ் இல்லை; ரோகிணி தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

அறிவிப்பு பலகை
அறிவிப்பு பலகை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை வெளியாக உள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரோகிணி தியேட்டர்
ரோகிணி தியேட்டர்

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் லியோ படத்திற்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே பட வசூலில் கிடைக்கும் தொகையை பகிர்வு செய்து குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இந்த நடவடிக்கையை திரையரங்க நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in