படப்பிடிப்பில் 350 பழங்கால பொருட்கள் கொள்ளை!

படப்பிடிப்பில் 350 பழங்கால பொருட்கள் கொள்ளை!
‘த கிரெளன்’ தொடரில்

படப்பிடிப்பில், ரூ.1.51 கோடி மதிப்பிலான 350 பழங்கால பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, ’த கிரெளன்’ (The Crown) என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பானது. முதல் நான்கு சீசன் முடிந்த நிலையில், அடுத்து 5-வது சீசன் வெளியாக இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்துவந்தது.

Photo Credit: Alex Bailey

இதற்காக, அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பழமையான பொருட்கள் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இங்கிருந்து வெள்ளை ஆபரணங்கள் உட்பட சுமார் 350 பழங்கால பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.1.51 கோடி என்று கூறப்படுகிறது.

இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாகத் திருப்பி வரும் என்று நம்புவதாக, நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. அதுவரை படப்பிடிப்பை நிறுத்தும் எண்ணமில்லை என்றும் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.