`எங்க ஊருக்கு இணைப்புச் சாலையை கேட்டுப் பெற்ற எம்பிக்கு நன்றி'- சு.வெங்கடேசனுக்கு சசிகுமார் பாராட்டு

சு.வெங்கடேசன் எம்பி - இயக்குநர் சசிகுமார்
சு.வெங்கடேசன் எம்பி - இயக்குநர் சசிகுமார் `எங்க ஊருக்கு இணைப்புச் சாலையை கேட்டுப் பெற்ற எம்பிக்கு நன்றி'- சு.வெங்கடேசனுக்கு சசிகுமார் பாராட்டு

மதுரை அருகே இணைப்பு சாலை பெற்று தந்த வெங்கடேசன் எம்பி, பரிசீலனை செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கு சினிமா இயக்குநர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் பாதை அணுகுச்சாலை இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்தனர். இதனால் ராஜகம்பீரம், தாமரைப்பட்டி, இடையபட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் நெடுஞ்சாலையை அடைய பல கிலோ மீட்டர் தூரம் சென்று நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதுபோல கொட்டாம்பட்டி அருகே வலைசேரிபட்டியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மதுரை எம்பி வெங்கடேசன் நேரிலும், கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகளை பரிசீலித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடேசன் எம்பிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜன.30-ல் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து எங்கள் ஊர் புதுதாமரைப்பட்டி, பக்கத்து ஊர் ஒத்தக்கடை, திருமோகூருக்கு இணைப்பு சாலையை மத்திய அரசிடம் கேட்டு பெற்ற எங்க ஊர் எம்பி வெங்கடேசன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சினிமா இயக்குநரும், நடிகருமான எம்.சசிகுமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in