நடிகரும் இயக்குநருமான ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார்

நடிகரும் இயக்குநருமான ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார்

நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஆர்.என்.ஆர்.மனோகர், ‛மைந்தன்’, ‘கோலங்கள்’ ஆகிய திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்துக்கு இவர்தான் வசனம் எழுதியவர். ‘மாசிலாமணி’, ‘வேலூர் மாவட்டம்’ திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், ‛தென்னவன்’, ‘சபரி’, ‘சலீம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘மிருதன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கவண்’, ‘விஸ்வாசம்’, ‘காப்பான்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், கடந்த 20 நாட்களாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய்த்தொற்று சரியான நிலையில் இன்று(நவ.17) மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in